டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு 7 நாள் அமலாக்கப்பிரிவு காவல்: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு 7 நாள் அமலாக்கப்பிரிவு காவல் என்று நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளனர். சிபிஐ வழக்கில் திகார் சிறையில் இருந்த மணீஷ் சிசோடியவை விசாரணைக்கு பின் நேற்று நேற்று அமலாக்கத்துறை கைது செய்தது. சிபிஐ காவலில் ஏற்கனவே 7 நாள் விசாரிக்கப்பட்ட நிலையில் தற்போது அமலாக்கப்பிரிவு விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அண்மையில் டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்களை அடுத்து, டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த  26 ஆம் தேதி மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிரடியாக கைது செய்தது.

மதுபான விற்பனை தொடர்பான கலால் வரிக் கொள்கையில் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மார்ச் 20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்னதாக, சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியாவை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

அதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், இன்று டெல்லி ரவுஸ் அவென்யூ கோர்ட்டில் மணீஷ் சிசோடியா ஆஜர்படுத்தப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரை வரும் 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். தற்போதைய நிலையில் மணீஷ் சிசோடியாவை நாங்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரிக்கை விடுக்கவில்லை. தேவைப்பட்டால் அடுத்த 15 தினங்களில் கோருவோம்” என சிபிஐ வழக்கறிஞர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து மணிஷ் சிசோடியா திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

Related Stories: