×

காஷ்மீர், லடாக்கில் சிக்கித் தவித்த 438 பயணிகள் பத்திரமாக மீட்பு

ஜம்மு: ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீ நகர் - லே தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதால் ஜம்முவிலிருந்து கார்கிலுக்கும், ஸ்ரீ நகரிலிருந்து லேவுக்கும் செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். அதனால் இந்திய விமானப்படையின் ஐஎல்-76 விமானத்தின் மூலம் ஸ்ரீ நகரில் இருந்து லேக்கு 260 பயணிகள் அழைத்து செல்லப்பட்டனர்.

இதேபோல், ஜம்முவிலிருந்து கார்கிலுக்கு நான்கு வகை ஏஎன்-32 விமானங்கள் மூலமாக 165 பயணிகள் அழைத்து செல்லப்பட்டனர். எஞ்சிய 13 பயணிகள் கார்கிலில் இருந்து ஜம்முவுக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டனர். இந்திய விமானப்படை மூலம் ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக்கில் சிக்கித் தவித்த 438 பயணிகளை பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.Tags : Kashmir ,Ladakh , 438 passengers stranded in Kashmir, Ladakh safely rescued
× RELATED பாகிஸ்தான், சீனாவுக்கு இந்தியா கண்டனம்