ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து இருவர் தற்கொலை: சிபிசிஐடி அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து 2 பேர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் சிபிசிஐடி அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. கேம்ஸ் 24*7 என்ற நிறுவனத்துக்கு சிபிசிஐடி அனுப்பிய நோட்டீஸை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை பெருங்குடியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த மணிகண்டன் என்பவர் மனைவி, மகன்களை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் அண்ணாநகரைச் சேர்ந்த ரகுவரன் என்பவரும் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டார்.

Related Stories: