×
Saravana Stores

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்களை கண்டுபிடிக்காதது ஏன்?: சிபிசிஐடி-க்கு ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்களை கண்டுபிடிக்காதது ஏன்? என்று சிபிசிஐடி-க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மாணவிகளின் அணிகலன்களை கழற்றி சோதனை செய்யும் நீங்கள் போலியாக தேர்வு எழுதிய மாணவர்களை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை என காட்டமாக கூறினார். செய்தி ஊடகங்கள் சரியாகத்தான் செய்தியை வெளியிடுகின்றன; அதில் என்ன தவறு உள்ளது என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகளாக விசாரித்தும், வழக்கை சிபிசிஐடி போலீசார் முடிக்காதது குறித்தும் நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

 

The post நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்களை கண்டுபிடிக்காதது ஏன்?: சிபிசிஐடி-க்கு ஐகோர்ட் கிளை கேள்வி appeared first on Dinakaran.

Tags : ICourt Branch ,CBCIT ,Madurai ,High Court ,CBCID ,Dinakaran ,
× RELATED சட்ட விரோத குவாரிகள் தொடர்பாக புகார்...