மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் முதல்வர் பிறந்தநாள் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ வழங்கினார்

பொன்னேரி: மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நேற்று ஏலியம்பேடு, கூடுவாஞ்சேரி, காட்டாவூர், அரசூர், ஏறுசிவன், பெரும்பேடு ஆகிய ஊராட்சிகளில் கொண்டாடப்பட்டது. மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் காணியம்பாக்கம் ஜெகதீசன் தலைமை வகித்தார். ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி, முன்னாள் ஒன்றிய செயலாளர் நரசிங்க மூர்த்தி முன்னிலை வகித்தனர். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ெஜ.கோவிந்தராஜன் எம்எல்ஏ, அனைத்து ஊராட்சிகளிலும், கட்சி கொடி ஏற்றி, கல்வெட்டுகளை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

மேலும் பள்ளி மாணவர்களுக்கு மேஜை, நாற்காலி, நோட்டு-புத்தகம், பேனா, இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கினார். விழாவில் ஒன்றிய நிர்வாகிகள் தன்சிங், ஸ்டாலின், முனுசாமி, குணாளன், பார்த்தசாரதி, குமார், தேசராணி தேசப்பன், தினேஷ், வெற்றி ராஜேஷ், பழனி, ஜெகன், வேலு, இளஞ்செல்வி பார்த்திபன், பொன்னேரி இளங்கோ, வக்கீல் ராதாமணவாளன், ஆதி, பார்த்திபன், உமாபதி, சண்முகம், தன்ராஜ், சரவணன், கோமளா, நிர்மலா, வெற்றிச்செல்வி, துரை, தேவராஜ், நேதாஜி, காட்டூர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: