×

நாகூர் பட்டினசேரி கடற்கரையில் சிபிசிஎல் கச்சா எண்ணெய் குழாயில் மீண்டும் கசிவு: மக்கள் அச்சம்

நாகை: நாகூர் பட்டினசேரி கடற்கரையில் சிபிசிஎல் கச்சா எண்ணெய் குழாயில் மீண்டும் கசிவு ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் கொலையில் கசிவு ஏற்பட்டு வானுயரத்துக்கு பீய்ச்சி அடித்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எண்ணெய் கசிவை 2 முறை சரி செய்ததாக சிபிசிஎல் அறிவித்த நிலையில் இன்று மீண்டும் கசிவு ஏற்பட்டுள்ளது.

குழாயில் கச்சா எண்ணெய் செலுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்த நிலையில் இன்று பம்பிங் செய்ததால் கசிவு ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் பீய்ச்சி அடித்து மீண்டும் கடலில் கலந்ததை பார்த்து மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கச்சா எண்ணெய் கொலையில் கசிவு ஏற்பட்டுள்ள இடத்தில் வட்டாச்சியர் ராஜசேகரன் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
 
நாகை மாவட்டம் நாகூரை அடுத்த நரிமணத்தில், பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சுத்திகரிப்பு நிலையம் சிபிசிஎல் உள்ளது. காவிரி படுகையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் இங்கு சுத்திகரிக்கப்பட்டு லாரிகள், கப்பல்கள் மூலம் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கப்பல்களுக்கு கச்சா எண்ணெய்யை கொண்டு செல்ல நரிமணத்தில் உள்ள சி.பி.சி.எல். நிறுவனத்தில் இருந்து சாமந்தான்பேட்டை வழியாக நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமம் வரை கடற்கரையில் எண்ணெய் குழாய் புதைக்கப்பட்டுள்ளது. இந்த குழாய் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி நள்ளிரவு பட்டினச்சேரி கடற்கரையில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறி கடலில் கலந்தது. இதனால் கடல் நீர் முற்றிலுமாக கருப்பு நிறமாக மாறியது. அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தை ஆய்வு செய்து குழாய் உடைப்பை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர்

இந்த நிலையில் உடைப்பு சரி செய்யப்பட்ட குழாயில் இருந்து 5-ம் தேதி மீண்டும் கச்சா எண்ணெய் கசிந்ததால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது. மீண்டும் அதே இடத்தில் பழுது நீக்க பணியில் இயந்திரங்கள் மற்றும் ஊழியர்களைக் கொண்டு பணி நடைபெற்று வருகிறது.குழாயில் கசிவு ஏற்படுமா என சோதனை செய்ய சிபிசிஎல் நிர்வாகம் கச்சா எண்ணெயை குழாயில் அழுத்தத்துடன் செலுத்திய போது கசிவு ஏற்பட்டது.

இந்நிலையில் குழாயில் கச்சா எண்ணெய் செலுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்த நிலையில் இன்று பம்பிங் செய்ததால் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கச்சா எண்ணெய் பீய்ச்சி அடித்து மீண்டும் கடலில் கலந்ததை பார்த்து மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Tags : Pattinassery beach ,Nagor , CBCL crude oil pipeline spills again off Pattinassery beach in Nagor: People panic
× RELATED நாகூர் தர்கா குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்