×

கர்நாடகாவில் பாஜக மீது முன்னால் எம்.எல்.சி பகிரங்க குற்றச்சாட்டு: பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த புட்டண்ணா

கர்நாடகா: 20 வருட அரசியல் வாழ்க்கையில் பாரதிய ஜனதாவை போல ஒரு ஊழல் அரசை கண்டதில்லை என்று அந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்திருக்கும் புட்டண்ணா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகாவில் பாஜக சார்பில் பெங்களூரு ஆசிரியர்கள் தொகுதியில் இருந்து மேலவை உறுப்பினராக கடந்த ஆண்டு பதவி ஏற்றவர் புட்டண்ணா. இவருக்கான மேலவை பதவிக்காலம் 4 வருடங்கள் மீதமுள்ள நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரசில் இணைந்தார்.

கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே. சிவகுமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் முன்னிலையில் அவர் தன்னை காங்கிரசில் இணைத்து கொண்டார். மக்களுக்கு பணியாற்ற பாஜகவில் இணைந்ததாகவும் ஆனால் தனது 20 வருட அரசியல் வாழ்க்கையில் பாரதிய ஜனதாவை போல் ஒரு ஊழல் அரசை கண்டதில்லை என்றும் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். எதிர்பார்த்தது போல் எந்த மக்கள் பணியையும் பாஜக அரசின் மூலமாக செய்ய முடியவில்லை இன்றும் அவர் கவலை தெரிவித்தார். கர்நாடகாவில் முக்கிய தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருவதால் நடைபெறவுள்ள சட்ட மன்ற தேர்தல் பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.


Tags : MLC ,BJP ,Karnataka ,Buttanna ,Congress , Karnataka, BJP, former MLC, allegation, Putanna joined Congress
× RELATED இடஒதுக்கீடு தொடர்பாக கர்நாடக பாஜக...