×

இன்ஸ்டாவில் புது சாதனை: அல்லு அர்ஜுனுக்கு 20 மில்லியன் பாலோயர்கள்

ஐதராபாத்: இன்ஸ்டகிராமில் புதிய சாதனை படைத்திருக்கிறார் அல்லு அர்ஜுன். புஷ்பா படம் மூலம் பான் இந்தியன் ஸ்டாராக மாறிப்போனார் அல்லு அர்ஜுன். அவருக்கான ரசிகர்கள் பட்டாளமும் அதிகரித்து வருகிறது. புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் செய்த மேனரிசங்கள், உலகம் முழுவதும் பிரபலமானது. இந்நிலையில், இப்போது புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வருகிறார். மேலும் இன்ஸ்டகிராமில் 20 மில்லியன் பாலோயர்களை பெற்று, இத்தனை பின்தொடர்பவர்களை பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் பிரியங்கா சோப்ராவுக்கு 85.7 மில்லியன் பாலோயர்கள் இருப்பதுதான் அதிகபட்சமாகும். அடுத்ததாக பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமாருக்கு 65 மில்லியின் பாலோயர்கள் உள்ளனர். தென்னிந்திய சினிமாவில் ராஷ்மிகாவுக்குதான் அதிகமாக 37 மில்லியன் பின்தொடர்பவர்கள் இருக்கிறார்கள். தென்னிந்திய ஹீரோக்களில் முதலிடத்தை அல்லு அர்ஜுன் பெற்றிருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் தரப்பிலிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

Tags : Allu Arjun , New Record On Insta: Allu Arjun Gets 20 Million Followers
× RELATED புஷ்பா 2 இரண்டாவது பாடல் வெளியீடு