×

அரசுப் போக்குவரத்து கழக பேருந்து பயணிகளுக்கான குறைதீர் உதவி எண், இணையதளம்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

சென்னை: அரசுப் போக்குவரத்து கழக பேருந்து பயணிகளுக்கான குறைதீர் உதவி எண் மற்றும் இணையதளத்தை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசுப் போக்குவரத்து கழகங்களுக்கான பயணிகள் குறைதீர் மற்றும் புகார் தீர்வு உதவி எண்(1800 599 1500) மற்றும் ‘அரசு பஸ்’ பொது இணையதளத்தையும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துறை செயலாளர் கோபால் மற்றும் போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பின் நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது: அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் 1800 599 1500 என்ற இலவச எண் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓட்டுநர், நடத்துனர்களால் ஏற்படும் பிரசனை, பேருந்து பராமரிப்பு குறித்து எந்த குறைகளை தெரிவிக்கலாம். குறைகளை பதிவு செய்ய தனி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறைகளை பதிவு செய்ததற்கான அடையாள எண் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் தெரிவிக்கப்படும். விழா காலங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்தும் தெரிந்துக்கொள்ளலாம். மேலும் ‘அரசு பஸ்’ என தனி (www.arasubus.tn.gov.in) இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது. அதிலும் பேருந்துகள் இயக்கப்படும் நேரங்கள் உள்ளிட்டவற்றை தெரிந்துக்கொள்ளலாம்.

மக்கள் எந்த நேரத்திலும் புகார் அளிக்க வேண்டும் இந்த எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே பேருந்துகளில் சிசிடிவி கேமரா, பேனிக் பட்டன் பொறுத்தப்பட்டுள்ளது அதை கண்காணிக்க பல்லவன் இல்லத்தில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது, அந்த மையத்திலேயே இத்திட்டத்திற்கான கண்காணிப்பும் நடைபெறும். மாநிலத்தில் உள்ள அனைத்து போக்குவரத்துக் கழகத்தில் இந்த உதவி எண் செயல்படும். ஏற்கெனவே அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள குறைதீர் எண்ணும் தொடர்ந்து செயல்படும். நிர்பயா திட்டத்தின் கீழ் பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகள் பெரும்பாலும் முடிக்கப்பட்டுள்ளது. தற்போது இணையதளமாக உள்ளதை எதிர்காலத்தில் செயலியாக மாற்ற அறிவுறுத்தியுள்ளோம்.


Tags : State Transport Corporation Bus Passenger Grievance Helpline ,Minister ,Sivashankar , State Transport Corporation Bus Passenger Grievance Helpline, Website: Launched by Minister Sivashankar
× RELATED புதிய பயண அட்டை வழங்கும் வரை சீருடை...