×

ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் கூட்டாளியாக செயல்படுகிறார் கவர்னர்: கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி: ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான தடை மசோதாவை கவர்னர் மீண்டும் திருப்பி அனுப்பிய செயல் அராஜகமானது. ஜனநாயகத்திற்கு எதிரானது. இதுவரை 44 பேர் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்தனர். பல லட்சங்களையும், கோடிகளையும் இழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் சொத்துக்கள் இழந்து தவித்து வருகின்றனர். தமிழக அரசு சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி தமிழக மக்களின் பணம் இப்படி கொள்ளைபோவதை தடுக்க மசோதா நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பப்பட்டது.

ஆனால் அதனை கவர்னர் திருப்பி அனுப்பி விளக்கம் கேட்கிறார். ஏற்கனவே ஒருமுறை திருப்பி அனுப்பினார். அதற்கு விளக்கம் அளித்து மீண்டும் அனுப்பினால் மீண்டும் திருப்பி அனுப்புகிறார். மத்திய அரசு சம்பந்தப்பட்ட விஷயத்தில் மாநில அரசு எப்படி சட்டம் போடமுடியும் எனக்கேட்கிறார். இதனை அன்றே கேட்டிருந்தால் அதற்கும் சேர்த்து பதிலளித்திருப்போம். ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் கூட்டாளியாக கவர்னர் செயல்படுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Governor ,K. Balakrishnan , Governor acting as accomplice of online gambling firms: K. Balakrishnan accused
× RELATED யோகா ஆரோக்கியமான நாட்டிற்கு வழிவகுக்கும்: ஆளுநர் ரவி