சென்னை: சிறந்த பலமுனை பட்டு நூற்பாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுத் தொகைகளை வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்கள் போன்றவற்றை திறந்து வைக்கவுள்ளார். திரவ ஹைட்ரஜன் விநியோக வாகனங்களை வழங்குகிறார். இதேபோன்று 3 துறைகள் சார்ந்த நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதில் முதலாவதாக எம்.சாண்ட் மணல் உற்பத்தியை ஒழுங்குபடுத்த புதிய கொள்கையை முதலமைச்சர் வெளியிட்டார். தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகத்துறை சார்பில் புதிய கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து சிறந்த பட்டு விவசாயிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுத் தொகையை வழங்கினார். கைத்திறன் மற்றும் கதர் துணிநூல் இயக்கத்தில் செயல்பட்டு வரக்கூடிய பட்டு வளர்ச்சி துறையின் சார்பில் பட்டு விவசாயிகள் மற்றும் பட்டு நூற்பாளர்களை ஊக்குவிக்கக்கூடிய வகையில் மாநில அளவில் சிறந்த 3 பட்டு விவசாயிகள், சிறந்த 3 பட்டு தானியங்கி பட்டு நூற்பாளர்கள் மற்றும் சிறந்த 3 பலமுனை பட்டு நூற்பாளர்களுக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசாக மொத்தம் 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகைக்கான காசோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
