×

திருப்பரங்குன்றம் அருகே கண்மாயில் மனித எலும்புகள்!: போலீசார் எலும்புகளை சேகரித்து தடயவியல் சோதனைக்கு அனுப்பினர்

மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள கண்மாயில் மனித எலும்பு கூடு மிதப்பதை கண்டு அங்கு குளிக்க சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருப்பரங்குன்றம் அடுத்த நிலையூர் அய்யனார் கோவில் கண்மாயில் மனித மண்டை ஓடு, விலா எலும்பு, கை, கால் எலும்புகள் அங்கங்கே கரை ஒதுங்கி கிடந்தன.

இதனை கண்டு அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆஸ்டின்பட்டி போலீசார் எலும்பு கூடுகளை கைப்பற்றி தடைய அறிவியல் சோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பரங்குன்றம் மற்றும் மதுரை பகுதியில் காணாமல் போனவர்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு கரை ஒதுங்கிய எலும்புகளுடன் பொருந்துகிறதா என்று கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.     


Tags : Kammail ,Tirupparankunam , Thiruparangunram, eyeball, human bone, police, forensics, investigation
× RELATED மழைநீரால் சாலை துண்டிப்பு ஆபத்தான...