×

பாஜவின் பிரிவினைவாதம் தமிழ்நாட்டில் எடுபடாது: கே.எஸ்.அழகிரி பேச்சு

சென்னை:கொளத்தூர் மேற்கு பகுதி திமுக சார்பில், ‘வென்று நிலைத்திருக்கும் என்றும் நல்லிணக்கம்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கொளத்தூர் அகரம் சந்திப்பில் நடந்தது. கொளத்தூர் மேற்கு பகுதி செயலாளர் நாகராஜன் தலைமை வகித்தார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணை செயலாளர் கே.சுப்புராயன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

எம்பி கலாநிதி வீராசாமி, முன்னாள் எம்எல்ஏ ப.ரங்கநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், ‘‘இந்தியாவின் அரசியல் நிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூர்ந்து கவனிக்கிறார். தொடர்ந்து நல்ல முடிவுகளை எடுக்கிறார். இந்திய சமூகத்தின் 5000 ஆண்டுகால சக்கரத்தை பின்னோக்கிச் செலுத்துகிறது பாஜ. வறுமை, வர்ண பாகுபாடு என மீண்டும் நிலைப்படுத்த பார்க்கிறார்கள். பாஜவின் பிரிவினைவாதம் விளம்பரத்திற்குஎடுபடும். தமிழகத்தில் அது எடுபடாது’’ என்றார்.



Tags : BJP ,Tamil Nadu ,Azhagiri , BJP's separatism won't work in Tamilnadu: KS Azhagiri speech
× RELATED கோவையில் 5 சீட் பாஜ அடம் எஸ்.பி...