×

இஸ்லாமியர்கள் பற்றி அவதூறு பரப்பிய வழக்கு: பாஜக பிரமுகர் கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: இஸ்லாமியர்கள் பற்றி அவதூறு பரப்பிய வழக்கில் பாஜக பிரமுகர் கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்து. இஸ்லாமியர்களைப் பற்றி அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட வழக்கில் பாஜக பிரமுகர் கல்யாணராமன் கைது செய்யப்பட்டார்.

பாஜக பிரமுகரான கல்யாணராமன் தொடர்ந்து சர்ச்சைக்குரிய பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார். இதனால் அவர் மீது பல்வேறு கண்டனங்கள் எழுந்த வண்ணம் இருந்தன. ஒவ்வொரு வருடமும் இவாறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டதன் காரணமாக பாஜக பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கடந்த 2017, 2018 ஆகிய காலகட்டத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், இது போன்று அரசியல் பிரமுகர்களையும், முக்கிய தலைவர்களையும் மத உணர்வை புண்படுத்தும் வகையில் பல்வேறு கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதன் விவகாரத்தில் வழக்குகள் பதிவு செய்தனர். ஜனவரி 2021ம் ஆண்டில் கோயம்புத்தூர் மேட்டுப்பாளையத்தில் இது போன்று சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பதிவிட்டதால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சமூங்க வலைத்தளங்களில் தொடர்ந்து இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்த பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது ஏற்கனவே குண்டர் சட்டமும் பாய்ந்திருந்தது. இதையடுத்து இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ய மாட்டேன் என, தன்மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் பிராமண பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.

இதையடுத்து பிரமாணபத்திரத்தை மீறி இரு மதங்களுக்கிடையே உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கருத்துக்களை பதிவிட்டதன் காரணமாக கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கல்யாணராமன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டு எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இருதரப்பு வாதங்களும் முழுமையானதையடுத்து பாஜக பிரமுகர் கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Tags : Islamists ,Lumpur ,court ,Bajak Mukhakar Kallyanaraman , Egmore court sentences BJP leader Kalyanaraman to 163 days in jail for defaming Muslims
× RELATED மலேசிய ஓபன்: அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து