×

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நாளை நடைபெறும் கடைசி டெஸ்ட் போட்டியில் பிரதமர் நரேந்திர மோடி டாஸ் போடுவதாக தகவல்

அகமதாபாத்: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நாளை கடைசி டெஸ்ட் போட்டியில் பிரதமர் நரேந்திர மோடி டாஸ் போடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை அகமதாபாத்தில் தொடங்க உள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய இங்கு 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை தொடங்குகிறது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான இது ஒரு லட்சத்து 32 ஆயிரம் இருக்கை வசதி கொண்டது. முதல் நாள் ஆட்டத்தை காண ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டெஸ்ட் போட்டி முதல் நாள் ஆட்டத்தை பிரதமர் மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசும் நேரில் பார்க்க உள்ளனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளதாக குஜராத் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த போட்டியை மேலும் சுவாரசியம் ஆக்கும் விதமாக இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நாளை தொடங்க உள்ள டெஸ்ட் போட்டியில் பிரதமர் நரேந்திர மோடி டாஸ் போடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் இந்திய அணி களம் இறங்க உள்ளதால் நாளை நடைபெறும் போட்டி இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Tags : Narendra Modi ,Test ,India ,Australia , It is reported that Prime Minister Narendra Modi will throw the toss in the final Test match between India and Australia tomorrow
× RELATED முதலமைச்சரின் விரிவான மருத்துவக்...