திமுக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் பாஜவின் திட்டம் பலனளிக்காது: ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டி

ஈரோடு: ஈவிகேஎஸ்.இளங்கோவன் ஈரோட்டில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றுள்ள நான், வருகிற 10ம் தேதி எம்எல்ஏவாக பதவி ஏற்க உள்ளேன். தொகுதிக்கு உட்பட்ட 33 வார்டுகளிலும், எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வார்டுகளில் நிலவும் குடிநீர், சாக்கடை கழிவுநீர் மற்றும் சாலை போக்குவரத்து உள்ளிட்ட பிரச்னைகள் அத்தியாவசியமாக தீர்க்கப்பட வேண்டி உள்ளது.

இதனை இத்தொகுதி அமைச்சர் முத்துசாமியுடன் இணைந்து தீர்வுகாண முழு முயற்சி மேற்கொள்வேன். பாஜவினர், புதிது புதிதாக பிரச்னைகளை ஏற்படுத்தி திமுக அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். எதுவும் பலன் அளிக்காது. தமிழக மக்கள் எப்போதும், திமுக அரசுக்கே தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். பாஜவில் இருப்பவர்கள் அதிமுகவிற்கு வருவது, அதிமுகவில் இருப்பவர்கள் பாஜ செல்வது இருகட்சிகளின் அழிவையே எடுத்து காட்டுவதாக உள்ளது.

Related Stories: