×

இந்திய கடற்படை ஹெலிகாப்டர் கடற்கரை அருகே அவசர அவசரமாக தரையிறங்கியபோது விபத்து: வீரர்கள் 3 பேர் பத்திரமாக மீட்பு.!

மும்பை: இந்திய கடற்படை ஹெலிகாப்டர் கடற்கரை அருகே அவசர அவசரமாக தரையிறங்கியபோது விபத்துக்குள்ளானது. மராட்டிய மாநிலம் மும்பை கடற்பகுதியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான இலகு ரக ஹெலிகாப்டர் இன்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அந்த ஹெலிகாப்டரில் 3 பேர் பயணித்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. உடனடியாக ஹெலிகாப்டரை விமானி அவசர அவசரமாக மும்பை கடற்கரை அருகே தரையிறக்கினார்.

அவசர அவசரமாக தரையிறங்கியபோது ஹெலிகாப்டர் கடற்கரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த கடற்படை மீட்புக்குழுவினர் உடனடியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, மும்பை கடற்கரை பகுதியில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இருந்த வீரர்கள் 3 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனார். 3 வீரர்களுக்கும் சிறு காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அனைவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Indian Navy , Indian Navy chopper makes emergency landing near beach: 3 soldiers rescued safely!
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...