குஜராத், அசாமில் அதிகாலை நிலநடுக்கம்

பைசாபாத்: ஆப்கானிஸ்தானின் பைசாபாத் நகரில் இன்று அதிகாலை 1.40 மணியளவில் 4.2 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. ஆனால் கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக இப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக 2ம் தேதி, ஒரே நாளில் இரண்டு முறை இப்பகுதியில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.

அதேபோல் குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் இன்று அதிகாலை 3.42 மணிக்கு ரிக்டர் அளவில் 3.3 ஆக லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. அதேபோல் அசாமின் கம்ரூப் மாவட்டத்தில் அதிகாலை 3.59 மணியளவில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கத்திற்கான மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.

Related Stories: