×

அண்ணாமலை சுட்ட தோசை..... அதிமுக ஐடி விங்க் வெளியிட்ட வீடியோ வைரல்

சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய தோசை கமெண்ட் ஒன்றிற்கு பதிலடியாக அதிமுக ஐடி விங்க் சார்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், உண்மையிலேயே அண்ணாமலை தோசை சுட்டு.. பிரச்சாரம் செய்தது அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் கிண்டலாக பார்க்கப்படுகிறது. பாஜக நிர்வாகிகள் பலர் வரிசையாக அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதனால் அதிமுக- பாஜக இடையிலான மோதல் தற்போது முற்றி உள்ளது. பாஜகவில் முக்கிய நிர்வாகியாக இருந்த ஐடி விங் நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்து உள்ளார்.

பாஜவில் இருந்து வெளியேறியவர், தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து விட்டுச் சென்றுள்ளார். மிக மோசமாக ‘420மலை’ என விமர்சித்திருக்கிறார். அதேபோன்று பாஜ நிர்வாகி திலீப் கண்ணனும் அதிமுகவில் இணைந்து உள்ளார். அதிமுகவில் இணைந்த பின்னர் அண்ணாமலையின் மீது அவரும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அண்ணாமலையை விமர்சனம் செய்த திலீப் கண்ணன், ‘இந்த வார் ரூம் சுவர் இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகுதோ..??

தான் பதவிக்கு வரும் போது 500  தலைவர்களை உருவாக்குவேன் என்று சொல்லி பதவி ஏற்றார் அண்ணாமலை.. பதவியேற்ற 20 மாதத்தில் எத்தனை தலைவர்களை உருவாக்கினார்..?? ஒருத்தருக்கு கூட மீடியா  வெளிச்சம் வந்திடக் கூடாதுன்னு தொலைக்காட்சி விவாதங்களுக்கு செல்லவிடாமல் இவர்  மட்டும் பேட்டி கொடுத்து இன்றுவரை சீன் போட்டுட்டு இருக்கார்’ என்று  குறிப்பிட்டிருந்தார். பாஜ நிர்வாகிகளை இப்படி அதிமுக தங்கள் பக்கம் தூக்கியதை பாஜ தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.

இதுகுறித்து, அண்ணாமலை அளித்த பேட்டியில், ‘நான் தோசை சுடவோ, இட்லி சுடவோ வரவில்லை. பாஜகவின் மேனேஜராக இருக்க வரவில்லை. நான் அரசியல் செய்ய வந்து இருக்கிறேன். அதை செய்வேன். கலைஞர்.. ஜெயலலிதா போல முடிவு எடுப்பேன். நான் தலைவன்.. நான் யாருக்கும் கவலைப்பட மாட்டேன். நான் தலைவரை போல சில முடிவுகளை எடுப்பேன். நான் எதை பற்றியும் கவலைப்படாமல் முடிவு எடுப்பேன். என்னை டெல்லி மாற்றிவிடும் என்ற பயத்தில் முடிவு எடுக்காமல் இருக்க மாட்டேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த பேட்டியானது, ஒரு தலைவருக்கான பேச்சு மாதிரி தெரியவில்லை என்றும், நாலந்தர பேச்சாளர் மாதிரி இருப்பதாகவும் பல்வேறு அரசியல் கட்சியினர் அவரை விமர்ச்சித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், அண்ணாமலையிடம் பேச்சு மட்டுமே உள்ளது என்றும், சீன் ேபாட்டுட்டு போய்கிட்டே இருக்கார்’ என்றும் அந்த கட்சியில் இருந்த ஐடி நிர்வாகிகள் கூறியிருப்பது பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், உண்மையிலேயே அவரது செயல்பாடுகளும், அதேபோன்று  இருப்பதாகவே அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

அதற்கு உதாரணமாக, அவரது தோசை கமெண்ட் அரசியல் வட்டாரத்தில் காமெடியாக பார்க்கப்படுகிறது. அண்ணாமலை சுட்ட தோசை.. என்ற பேச்சு அரசியல் வட்டாரங்களில் படு கிண்டலாக பேசப்பட்டு வருகிறது. மேலும் அண்ணாமலையின் இந்த பேட்டி தற்போது படு வைரலாகி வருகிறது. ஏனென்றால், பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய தோசை கமெண்டிற்கு பதிலடியாக அதிமுக ஐடி விங் சார்பாக வீடியோ ஒன்று இணையத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளது. அதில் பாஜ தலைவர் அண்ணாமலை, உண்மையிலேயே பிரச்சாரத்தின் போது தோசை சுட்ட காட்சிகளை பதிவேற்றி உள்ளனர்.  

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது பிரச்சாரத்தில் பல  தலைவர்கள் டீ போடுவது, காபி போடுவது என்று வித்தியாசமாக பிரச்சாரம்  செய்தனர். பாஜ தலைவர் அண்ணாமலை இதில் தோசை சுட்டு பிரச்சாரம் செய்தார். அதை தான் இப்போது தோசை சுட மட்டுமே தமிழக பாஜகவில் அண்ணாமலை இருப்பது... போன்று அவரது பேட்டி வீடியோவையும், தோசை சுட்ட வீடியோவையும் இணைத்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தான் தற்போது அரசியல் வட்டாரங்களில் படு வேகமாக பரவி வருகிறது. இது பாஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags : Anamalai ,Indirect ID Wink , Annamalai Chutta Dosa.....Video posted by AIADMK id wink went viral
× RELATED தமிழ்நாட்டில் கூட்டணியை அதிமுக...