×

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள மகளிர் காவல் நிலையத்தை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள மகளிர் காவலர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

சர்வதேச மகளிர் தினம் இன்றைய தினம் கொண்டாடப்படுவதை  ஒட்டி தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு இடங்களில் சாதனைகள் புரிந்த மகளிருக்கு பாராட்டுவிழாக்களும் மகளிரை முன்னிறுத்த கூடிய பல்வேறு நிகழ்ச்சிகளும் இன்றையதினம் நடைபெற்றுவருகிறது. அதன் ஒருபகுதியாக சென்னை எத்திராஜ் கல்லூரில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.கக.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு தனது இல்லத்திற்கு செல்லும் வழியில், சென்னை அண்ணாசாலையில் உள்ள மகளிர் காவல் நிலையத்துக்கு சென்ற முதல்வர் அங்கு பணியில் உள்ள காவலர்களுடன் உரையாடி அவர்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் அங்கு பணியில் இருந்த பெண் காவலர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.


Tags : International Women's Day ,Chief Minister of ,Women ,Guilty ,Anna Road, Chennai ,Women's Guilty Station ,Anna Road ,G.K. Stalin , International Women's Day, Chennai Anna Road, Women's Police Station, CM M.K.Stal's inspection
× RELATED மீண்டும் டபுள் டெக்கர் பேருந்து...