×

சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றும் வலிமை மிக்கவர்கள் பெண்கள் :பாஜக தலைவர் அண்ணாமலை

சென்னை: சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றும் வலிமை மிக்கவர்கள் பெண்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண் என்ற பாரதியின் கனவுக்கேற்ப, சமூகம், பொருளாதாரம், கலை, கலாச்சாரம், அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் நம் சகோதரிகளால் நம் நாடே பெருமை கொள்கிறது.

சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றும் வலிமை மிக்க மகளிருக்கு, தமிழக பாஜக சார்பாக சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த பதிவில் கூறியுள்ளார். இதே போல், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,பெண்களைப் போற்றிடும் இத்திருநாளில் பெண்களை அதிகாரப்படுத்துவதே அவர்களது அடிமைத்தளை உடைக்க இருக்கும் முதன்மை வாய்ப்பென்பதை உணர்ந்து, பாலினச்சமத்துவத்தை நிலைநாட்டவும், பெண்களுக்குரிய உரிமைகளைப் பெற்றுத் தரவும் நாம் தமிழர் கட்சி சமரசமின்றி சமர் செய்யும் என உறுதியளிக்கிறேன். உலக மகளிர் அனைவருக்கும் மகளிர் நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Raja ,Anamalai , Test, Achievement, Strength, Women, BJP
× RELATED பிரியங்காவை எதிர்த்து தான்...