திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து பொன்னேரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், விறகு அடுப்பு எரிய வைத்தும் விலை உயர்வுக்கு நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
