தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட அரியவகை குரங்குகள் மீட்பு: ஒருவர் கைது

சென்னை: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம் நேற்று முன்தினம் இரவு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.  அதில் வந்த சென்னையைச் சேர்ந்த பயணி வைத்திருந்த பிளாஸ்டிக் கூடைகளில் 4 வெளிநாட்டு குரங்குகள் இருந்தன. இந்த ரக குரங்குகள் தென் அமெரிக்காவில் அதிகமாக  வனப்பகுதிகளில் வசிப்பவை என்பதும் அனுமதி சான்றிதழ் பெறாமல் இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

மேலும், இந்த குரங்குகள் மூலம் வெளிநாட்டு நோய்க்கிருமிகள் நம் நாட்டில் பரவலாம் என்பதால், இந்த குரங்குகளை இந்தியாவிற்குள் கொண்டுவர அனுமதி இல்லை.  எனவே இந்த குரங்குகளை கடத்தி வந்த, சென்னை பயணியை கைது செய்தனர்.  பின்னர், சென்னையில் இருந்து தாய்லாந்து சென்ற ஏர் ஏசியா விமானத்தில், இந்த குரங்குகளை தாய்லாந்து நாட்டிற்கு திருப்பி அனுப்பினர்.

Related Stories: