×

ஜம்மு நகர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவில் ஒருவர் பலி

ஜம்மு: ஜம்மு நகர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். 6 பேர் படுகாயமடைந்தனர்.  காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்துக்கு அருகிலுள்ள செர்ரி கிராமத்தில் ஜம்மு-நகர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி  ஒருவர் உயிரிழந்தார். 6 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் இரண்டு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும், சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Jammu Nagar National Highway , One killed in landslide on Jammu Nagar National Highway
× RELATED ஜம்மு காஷ்மீரில் ரூ.300 கோடி போதைபொருள்...