×

அதானி மீது காங். குற்றச்சாட்டு மக்களை பலிகொடுத்து பாஜவுக்கு தேர்தல் நிதி

புதுடெல்லி:  காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதானி குழுமத்தின் அதானி எலக்ட்ரிசிட்டி மும்பை நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டில் சீன நிறுவனங்கள் உட்பட ஆசிய முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.7,200 கோடி வெளிநாட்டு கடனை திரட்டியது. இதற்கு, மகாராஷ்டிரா மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் வழங்கப்பட்ட மின் விநியோக உரிமை உள்ளிட்ட முக்கிய பங்கு பத்திரங்களை அதானி குழுமம் அடமானமாக வைத்துள்ளது.  மும்பையில் 3ல் 2 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் அதானி நிறுவனம் கடனை செலுத்த தவறினால் மும்பையின் நிலை என்னவாகும்? இதுபோல இந்திய மின் நுகர்வோரை பலிகொடுத்து அதானி குழுமம் பாஜவின் தேர்தல் வெற்றிக்கு வழிவகுக்கிறது. பிரதமர் மோடியின் அரசியல் எதிரிகளை விரைவாக விசாரிக்கும் எந்தவொரு புலனாய்வு அமைப்பும் அதானி குழுமத்தின் இந்த வெளிப்படையான மோசடி பரிவர்த்தனைகளை கவனிக்குமா? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.Tags : Kong ,Adani ,BJP , Kong on Adani. Alleged election funds for BJP by sacrificing people
× RELATED சிமெண்ட் துறையில் ஆதிக்கம்: அதானி குறித்து காங். எச்சரிக்கை