×

இலங்கையில் ஏப்ரல் 25ம் தேதி உள்ளாட்சி தேர்தல்

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இலங்கையிலுள்ள 340 உள்ளாட்சிகளுக்கும் இந்த மாதம் 9ம் தேதி தேர்தல் நடைபெறும் என வௌியான செய்திகளுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கே மறுப்பு தெரிவித்திருந்தார். நிதிநெருக்கடியால் உள்ளாட்சி தேர்தலை நடத்த போதுமான நிதியை அரசு ஒதுக்காததால், மார்ச் 9ம் தேதி தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலை உள்ளதாக இலங்கை தேர்தல்கள் ஆணையக்குழு கூறியிருந்தது.

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாத ரணில் விக்ரமசிங்கே அரசு, தோல்வி பயம் காரணமாகவே உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனிடையே, உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், 340 உள்ளாட்சிகளுக்கும் விரைவில் தேர்தலை நடத்துமாறு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், அடுத்த மாதம் 25ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என இலங்கை தேர்தல்கள் ஆணையக்குழு தெரிவித்துள்ளது.

Tags : Sri Lanka , Local government elections in Sri Lanka on April 25
× RELATED இந்தியா – இலங்கை பாலம்: ஆய்வு பணி விரைவில் நிறைவு