21 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது

திருவள்ளூர்: செங்குன்றம் அடுத்த பாலவாயல் சோத்துப்பாக்கம் சாலை மின்வாரிய அலுவலகம் எதிரே தனியார் குடோனில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் போலீசார் அங்கு சோதனை செய்தனர். அங்கிருந்த டாரஸ் லாரியை சோதனை செய்த போது கோழி தீவனத்திற்கு நடுவே மூட்டை மூட்டையாக 21 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. லாரி மற்றும் அரிசியை பறிமுதல் செய்த டிரைவர் விக்னேஷ் (24) குடோன் உரிமையாளர் தங்கப்பாண்டி (44) ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories: