வீரமரண வீரர்களின் பெயரில் ‘பச்சை’: உ.பி இளைஞர் விநோதம்

வாரணாசி: கார்கில் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் பெயரை தனது உடல் முழுவதும் பச்சையாக குத்தி உத்தரபிரதேச இளைஞர்சாதனை படைத்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் பண்டிட் அபிஷேக் கவுதம் என்பவர், கார்கில் போரில் வீரமரணம் அடைந்த  தியாகிகளின் தியாகத்தை நினைவு கூரும் வகையில், அவரது உடற்பகுதி முழுவதும் வீரமரணம் அடைந்த 631 வீரர்களின் பெயர்களை பச்சை குத்தியுள்ளார்.

தொடர்ந்து வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினரை சந்தித்து வருகிறார். இதுவரை அவர் 559 வீரர்களின் குடும்பங்களை  சந்தித்துள்ளார். தனது உடற்பகுதியில் வீரர்களின் பெயர்களை அதிகளவு பச்சை குத்தியுள்ளால், அவரது சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

Related Stories: