சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சமூக சேவை செய்து வரும் பெண்களை பாராட்டி பரிசு வழங்கிய நீதிபதி

ஸ்ரீகாளஹஸ்தி : சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சமூக சேவை செய்து வரும் பெண்களை பாராட்டி நீதிபதி பரிசு வழங்கினார்.சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீகாளஹஸ்தி நீதிமன்றத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது, தனக்கென தனி பாணியில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி  பலருக்கு முன்மாதிரியாக சமூக சேவை செய்து வரும் பெண்களை நீதிபதி பேபி ராணி பாராட்டி சான்றிதழ்களையும் நினைவு  பரிசுகளையும்  வழங்கினார்.

இதன்பின் நீதிபதி பேபி ராணி பேசியதாவது:பெண்கள் தினத்தை முன்னிட்டு சட்ட அமைப்பில் உள்ள சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும். ஸ்ரீகாளஹஸ்தி தாசில்தார் ஜரீனா பேகம் தாசில்தாராக தனது பணியை செய்து தனித்துவத்தை காட்டி வருகிறார்.  திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த சித்தூர் மாவட்டத்தின் மிகப்பெரிய வருவாய் மண்டலமாக அறியப்பட்ட ஸ்ரீகாளஹஸ்தியில் பணிபுரிந்து முன்னுதாரணமாக திகழ்கிறார்.

இதேபோல் ஸ்ரீகாளஹஸ்தி மண்டல கல்வி அதிகாரி புவனேஸ்வரி, கல்வி அமைப்பில் துணிவான பணியில் ஈடுபட்டு, பெண்ணாக தனித்துவத்தை வெளிப்படுத்தி வருகிறார். கல்வி துறையில் மண்டல அளவிலான அதிகாரியாக, தொடர்ந்து கண்காணித்து, கல்வி வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் மருத்துவத்துறையிலும் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர்.

ஸ்ரீகாளஹஸ்தியை சேர்ந்த டாக்டர் தேஜஸ்வரி அபார திறமையை வெளிப்படுத்தி வருகிறார். கொரோனா காலத்தில் எந்தவித அச்சமும் இன்றி ஸ்ரீகாளஹஸ்தி நகர நல மையத்தில் தன் கடமைகளைச் செய்து ஏழைகளுக்கு ஆதரவாக நின்றார்.

 தற்போது தொட்டம்பேடு மருத்துவத்துறை அதிகாரியாக ஏழைகளுக்கு சேவை செய்து பாராட்டுகளை பெற்று வருகிறார்.  ஸ்ரீகாளஹஸ்தியைச் சேர்ந்த பிரஜக்னஸ்ரீ, தனக்கே உரிய பாணியில் வழக்கறிஞராக மக்களுக்குச் சேவை செய்து வருவதுடன், சட்டத் துறையில் சட்ட அமைப்புகளைப் பற்றி மக்களுக்குப் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: