×

ஏப்ரல் 5ம் தேதி கோதண்டராமர் கல்யாண உற்சவம் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்ய வேண்டும்-அதிகாரிகளுக்கு ஜேஇஓ உத்தரவு

திருமலை : கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டாவில் கோதண்டராமர்  கல்யாண உற்சவம் ஏப்ரல் 5ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்ய வேண்டும் என்று பல்வேறு துறை அதிகாரிகளுக்கு ஜேஇஓ வீரபிரம்மம் உத்தரவிட்டார்.திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக கட்டிடத்தில் கடப்பா மாவட்டம்  ஒண்டிமிட்டா கோதண்டராமர் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன்  ஆய்வு நடத்தினார்.

கோதண்டராமர் கோயிலில் மார்ச் 31 முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிரம்மோற்சவத்தின்போது பல்வேறு துறைகளை ஒருங்கிணைக்க சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும் என விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதுகுறித்து, இணை செயல் அதிகாரி வீரபிரம்மம் பேசியதாவது:

கோதண்டராமர்  கல்யாண உற்சவம்  ஏப் 5ம் தேதி கோலாகலமாக நடத்த, தேவையான ஏற்பாடுகளை இப்போதே தொடங்க வேண்டும்.  திருக்கல்யாணத்திற்கு ஏராளமான அதிகளவில் பக்தர்கள் வர வாய்ப்புள்ளதால்,  அனைத்து துறை அதிகாரிகளும் ஒய்எஸ்ஆர் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து திறம்பட ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.  பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு குடிநீர், மோர் விநியோகம் செய்ய போதிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.  

சுவாமிக்கு திருக்கல்யாணம் முடிந்து ஒவ்வொரு பக்தர்களுக்கும் வளையல், மஞ்சள், குங்குமம் வழங்கும் வகையில் ஏற்பாடுகளை செய்யுமாறு கோயில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கல்யாண மேடை மலர்களாலும் மின் அலங்காரங்களாலும் பக்தர்களை கவரும் விதமாக ஏற்பாடு செய்ய வேண்டும்.  பிரம்மோற்சவத்தின் போது நடத்தப்படும் வாகனச் சேவைகளில்  கண்கவர் கலை நிகழ்ச்சிகளை இந்து தர்ம பிரச்சார பரிஷத் அதிகாரிகளுக்கு ஏற்பாடு செய்யவேண்டும்.

பிரம்மோற்சவத்தின் போஸ்டர்கள் மற்றும் சிறு புத்தகங்கள் விரைவில் அச்சிடப்பட்டு பரவலாகப் வழங்க வேண்டும்.  பிரம்மோற்சவத்தில், குறிப்பாக கல்யாண உற்சவத்தில் நாளில், பக்தர்களுக்கு சிறு பிரச்னை ஏற்பட்டாலும், கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தெரிவித்து, பிரச்னையை தீர்க்க வேண்டும்.  பிரதிநிதி ஊழியர்களுக்கான உணவு மற்றும் தங்குமிட ஏற்பாடுகள் முன்கூட்டியே திட்டமிடப்பட வேண்டும்.  கோயில் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், கல்யாண மேடை வளாகத்திலும் தேவையான அளவு எல்இடி திரைகள் பொருத்தப்பட வேண்டும்.

மேலும் கேலரிகளில் அமர்ந்திருக்கும் பக்தர்களுக்கு வெயிலின் தாக்கம்  ஏற்படாத வகையில் போதுமான குளிரூட்டிகள் பொருத்த வேண்டும்.  இந்த பகுதியில் உணவு மற்றும் உணவு விநியோகம் செய்ய சிறப்பு கவுண்டர்கள் அமைக்க ஒய்.எஸ்.ஆர் மாவட்ட அதிகாரிகளுடன் இணைந்து திட்டம் வகுக்க வேண்டும்.  போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி அமைக்க வேண்டும்.  சிறப்பு மருத்துவ குழுக்கள், முதலுதவி மையங்கள் மற்றும் மருந்துகளை மருத்துவம் மற்றும் சுகாதார துறைதுறை தயார் செய்ய வேண்டும். இவ்வாறு  பல்வேறு துறை அதிகாரிகளுக்கு இணை செயல் அதிகாரி வீரபிரம்மம்உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில்  தேவஸ்தான தொலைக்காட்சி முதன்மை நிர்வாக அதிகாரி சண்முககுமார், தலைமை பொறியாளர் நாகேஸ்வரராவ், சி.ஏ.ஓ. சேஷசைலேந்திரா, கோயில் துணை இ.ஓ. நடேஷ்பாபு, டி.எப்.ஓ. நிவாஸ், கூடுதல் சுகாதார அலுவலர் டாக்டர்.சுனில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Gothandaram ,JEO , Tirumala: Kothandaram Kalyana Utsavam will be held on April 5 in Ondimitta, Kadapa district. To the devotees in this regard
× RELATED ஜாக்டோ-ஜியோ கோரிக்கை ஆசிரியர், அரசு...