தமிழ்நாட்டுக்கு வரும் வெளிமாநில தொழிலாளர்களின் தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது: அமைச்சர் கணேசன் பேட்டி

திருச்சி: தமிழ்நாட்டுக்கு வரும் வெளிமாநில தொழிலாளர்களின் தகவல் சேகரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கணேசன் தெரிவித்தார். திருச்சியில் அரசு தொழிலாளர் ஈட்டுறுதி (இஎஸ்ஐ) மருத்துவமனையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் நேற்று ஆய்வு செய்தார்.  

பின்னர் அவர் அளித்த பேட்டி:

வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு தற்போது வரக்கூடிய தொழிலாளர்களின் தகவல்கள், அந்தந்த மாவட்ட கலெக்டர், அதிகாரிகள் உறுதுணையோடு  சேகரிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது ஏறக்குறைய 6 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களின் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதி செய்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள பகுதிகளுக்கு சென்று பீகாரிலிருந்து வந்த ஆய்வு குழுவினர் விசாரித்தனர்.

அப்போது அங்குள்ள தொழிலாளர்கள், நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். இந்த பாதுகாப்பை உறுதி செய்த தமிழ்நாடு முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட தொழில் நகரங்களில் இருக்கக்கூடிய வெளிமாநில தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: