×

ஒடிசா பட்டாசு ஆலை விபத்தில் 4 பேர் பலி

புவனேஸ்வர்: ஒடிசாவின் குர்தா மாவட்டத்தில் உள்ள புசந்தாபுர் கிராமத்தில் பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இங்கு அனுமதியின்றி சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நாளை நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த பண்டிகைக்கான பட்டாசுகளை தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் பலியாகினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் சிறிது நேர போராட்டத்துக்கு பின்னர் தீயை அணைத்தனர். படுகாயமடைந்த 4 பேர் குர்தா மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த வெடிவிபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Odisha , Firecracker factory accident in Odisha, 4 killed
× RELATED கொலையான தந்தையின் கனவை நனவாக்கிய மகள்;...