×

கொடைக்கானலில் சோதனை முறையில் சீகை மரங்கள் அகற்றம்: சோலை காடுகளை அமைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி கொடைக்கானல் வனச்சரகத்தில் அந்நிய மரங்களை அகற்றி சோலை காடுகளை உருவாக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மலைப்பகுதிகளில் சவுக்கு, சீகை, குங்குலியம் உள்ளிட்ட அந்நிய மரங்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகம் வளர்ந்துள்ளன. இதனால் இயற்கையாக வளரும் புல்வெளிகள் மற்றும் சோலைக்காடுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் வனப்பகுதியில் உள்ள விலங்குகள், உணவு கிடைக்காமல் காடுகளை விட்டு குடியிருப்பு பகுதிகள் மற்றும் விளைநிலங்களுக்குள் நுழையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

எனவே அந்நிய மரங்களை அகற்ற நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி கொடைக்கானலில் அதற்கான பணிகள் சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ளன. அங்கு 100 ஹெக்டேருக்கு மேல் சீகை மரங்கள் அகற்றப்பட்டு அங்கு சோலை மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பேரிஜம் வனச்சரகத்திற்கு செல்லும் வழியில் பிரம்மாண்டமான சுற்றுலாத் தலமான மதிகெட்டான் சோலை அருகே 50 ஹெக்டேர் சீகை மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. சோதனை முறையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இதனை முழுமையாக மேற்கொள்ள பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். கொடைக்கானல் முழுவதும் உள்ள அந்நிய மரங்களை அகற்ற 50 ஆண்டுகள் வரை தேவைப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags : Kodaikanal , Kodaikanal, seigai trees, desert forest, forest department
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்