×

ஆசியாவில் கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட விமான நிலையங்களில் திருச்சி விமான நிலையத்திற்கு 2ம் இடம்..!!

திருச்சி: ஆசியாவில் கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட விமான நிலையங்களில் திருச்சி விமான நிலையத்திற்கு 2ம் இடம் கிடைத்துள்ளது. 20 லட்சம் பேருக்கும் குறைவான பயணிகள் வந்து செல்லும் விமான நிலையங்களில் திருச்சி 2ம் இடம் பெற்றுள்ளது. சர்வதேச ஏர்போர்ட் கவுன்சில் கணக்கெடுப்பில் ஆசியாவில் சிறந்த விமான நிலைய பட்டியலில் திருச்சி 2ம் இடம் பெற்றிருக்கிறது. 4 கோடி பயணிகளுக்கும் மேல் வந்து செல்லும் பெரிய விமான நிலைய பட்டியலில் மும்பை விமான நிலையம் முதலிடம் பெற்றிருக்கிறது. திருச்சி விமானநிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது.  

திருச்சியில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், மலிண்டோ, ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ், ஸ்கூட் ஆகிய விமான நிறுவனங்கள் விமான சேவை அளித்து வருகின்றன. குறிப்பாக திருச்சியில் இருந்து கோலாலம்பூர், சிங்கப்பூர், துபாய், ஷார்ஜா, கொழும்பு, குவைத், அபுதாபி, மஸ்கட் மற்றும் தோஹா ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. தமிழ்நாடு அளவில் சென்னைக்கு அடுத்தப்படியாக திருச்சி விமான நிலையம் உள்ளது. இந்நிலையில், ஆசியாவில் கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட விமான நிலையங்களில் திருச்சி விமான நிலையத்திற்கு 2ம் இடம் கிடைத்துள்ளது.


Tags : Trichy Airport ,Asia , Trichy Airport, Special, 2nd place
× RELATED திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்..!!