×

பொய்மையின் மொத்த உருவம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்: ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் சாடல்

சென்னை: பொய்மையின் மொத்த உருவம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். வைத்திலிங்கம் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், இன்னமும் கட்சியின் வளர்ச்சிக்காக, கட்சி ஒற்றுமைக்காக ஓயாது உழைத்துக் கொண்டிருக்கிறார் பன்னீர்செல்வம். தான் பொதுச்செயலாளராக ஆக வேண்டும் என்ற ஒரே தன்னல நோக்கோடு ஓபிஎஸ் மீது எடப்பாடி பொய்யான குற்றம்சாட்டுகளை சுமத்துகிறார். ஓபிஎஸ் மீது பொய்யான, அவதூறான, விஷமத்தனமான குற்றச்சாட்டுகளை மனசாட்சியுள்ள யாரும் ஏற்க மாட்டார்கள்.

மக்கள் முடிவுக்கு மாறாக செயல்படும் பழனிசாமி, அவரது ஆதரவாளர்கள் விரட்டியடிக்கப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை. 2024 மக்களவை தேர்தலை ஓபிஎஸ் தலைமையில் அதிமுக எதிர்கொள்ளும் என வைத்திலிங்கம் உறுதிபட தெரிவித்தார். கட்சியை எடப்பாடி பழனிசாமி அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்வதாக ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டிருந்தார். ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை பதிலடியாக ஜெயக்குமார் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டுள்ளதாக வைத்திலிங்கம் கண்டனம் தெரிவித்துள்ளார்.


Tags : minister ,Jayakumar ,OPS ,Vaithilingam Chatal , Falsehood, image, Jayakumar, OPS supporter Vaithilingam
× RELATED ஜெயக்குமார் மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு