×

திருக்கோஷ்டியூர் தெப்பத்திருவிழாவில் பங்கேற்பவர்களுக்கு வாகனங்கள் நிறுத்த வசதி செய்து கொடுக்க வேண்டும்: பக்தர்கள் கோரிக்கை

திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் நடைபெறும் மாசி மக தெப்ப உற்சவத்திற்கு வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் நிறுத்த வசதி செய்து கொடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப்பெருமாள் கோயிலில் மாசி மக தெப்ப உற்சவத்திருவிழா கடந்த பிப்.26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தெப்பத்திருவிழா நாளை மார்ச்.7ம் தேதி நடைபெறுகிறது. இந்த தெப்பத்திருவிழழவிற்கு தமிழக மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் கார் வேன் பஸ் உள்ளிட்டவைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கோஷ்டியூர் வந்து வழிபாடு செய்து விட்டு செல்வார்கள்.

இவர்கள் வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கு தனியாக ஏலம் விடப்பட்டு தெப்பக்குளம் மற்றும் கோயிலைச் சுற்றியுள்ள இரண்டு மூன்று இடங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும். இதில் கார், வேன், பஸ் உள்ளிட்டவர்களுக்கு தனித்தனியாக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
இந்நிலையில், தெப்பம் நடைபெறும் தெப்பக்குளம் அருகே உள்ள வயல் பகுதிகளில் கடந்த ஆண்டுகளில் வாகனங்கள் நிறுத்திய இடங்களில் தற்போது அவரவர்களுக்கு சொந்தமான பெரும்பான்மையான இடத்தில் முள்வேலி அமைத்து உள்ளதால் அந்தப் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் வெளியூர்களில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடங்களை கோயில் நிர்வாகம் மற்றும் ஏலம் எடுத்து இருப்பவர்கள் முறையாக செய்ய வேண்டும் எனவும், இல்லாவிட்டால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்த போதிய இடம் இன்றி அவதிக்குள்ளாக நேரிடும் என பக்தர்களும், சமூக ஆர்வலர்களும் கூறியுள்ளனர். எனவே கோயில் நிர்வாகம் மற்றும் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏலம் எடுத்தவர்கள் முறையான கார், வேன், பஸ்கள் நிறுத்துவதற்கு பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Tags : Devotees demand that vehicles be provided for those participating in the Tirukoshtiyur Theppathiruvizha
× RELATED சேலம் பெண்கள் சிறையில் முதன்முறையாக...