×

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் திரிகள் தயாரிக்கும் இடத்தில் திடீர் வெடி விபத்து: 2 பேர் மருத்துவமனையில் அனுமதி

விருதுநகர்: விருதுநகர் அருகே பட்டம்புத்தூரில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் காயமடைந்துள்ளனர். திரிகள் தயாரிக்கும் இடத்தில் உராய்வின் காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டு ஒரு அறை இடிந்து தரைமட்டமானது. வெடி விபத்தில் காயமடைந்த முத்துப்பாண்டி, கருப்பையா ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மருந்து கலக்கும்போது எதிர்பாராத விதமாக உராய்வு ஏற்பட்டு தீப்பிடித்தது. விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 2 பேரும் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் 80 சதவீத தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் கோட்டநத்தம் பகுதியில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையின் லைசென்ஸ் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 15 அறைகள் உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். இன்று காலை வழக்கம் போல் ஊழியர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டனர். ஆலையில் உள்ள ஒரு அறையில் கட்டநாயக்கன்பட்டியை சேர்ந்த கருப்பசாமி (60), டி.சேடப்பட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி(40) உள்பட 4 தொழிலாளர்கள் திரி தயாரிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

மருந்து கலக்கும்போது எதிர்பாராத விதமாக உராய்வு ஏற்பட்டு தீப்பிடித்தது. அதனைத்தொடர்ந்து கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்த பட்டாசுகளில் பரவி பயங்கர சத்தத்துடன் வெடிக்கத்தொடங்கியது. இந்த விபத்தில் அறையில் இருந்த கருப்பசாமி, முத்துசாமி ஆகிய 2 பேர் சிக்கி வெடி விபத்தில் உடல் கருகினர். மற்ற 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், வச்சக்காரபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 2 பேரும் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் 80 சதவீத தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடிவிபத்து தொடர்பாக வச்சக்காரபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Virudhunagar , Sudden explosion at firecracker factory near Virudhunagar: 2 admitted to hospital
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...