×

மே 7ல் நடைபெற உள்ள இளங்கலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு ஆன்லைனில் தொடங்கியது!!

டெல்லி : இளங்கலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு ஆன்லைனில் தொடங்கியது. இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் நீட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வு (NEET UG 2023) நடத்தப்படுகிறது. NEET UG நாடு முழுவதும் மே மாதம் 7ம் தேதி நடைபெறவுள்ளது. இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய பாடங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் 45 வினாக்கள் கேட்கப்படும். ஒட்டு மொத்தமாக 180 வினாக்கள் இடம் பெறும். ஒரு வினாவிற்கான சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில், மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. ஆங்கிலம், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் நடைபெறும் இந்த நீட் தேர்வை எழுத குறைந்தபட்ச வயது வரம்பு 17 ஆகும். உச்சபச்ச வயது வரம்பு ஏதும் இல்லை.


NEET UG-க்கு எப்படி விண்ணப்பிப்பது எப்படி?

படி 1: முதலில் neet.nta.nic.in அல்லது nta.ac.in. என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
படி 2: இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள NEET (UG) 2023-க்கான பதிவுக்கான இணைப்பைக் கிளிக் செய்யவும்.
படி 3: இப்போது பெயர், பெற்றோரின் பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் பிற விவரங்களைச் சமர்ப்பித்து உள்நுழைவை உருவாக்கவும்.
படி 4: இப்போது மீண்டும் பக்கத்திற்குச் சென்று உள்நுழையவும்.
படி 5: உள்நுழைந்த பிறகு, விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
படி 6: புகைப்படத்தைப் பதிவேற்றி கையொப்பமிடுங்கள்.
படி 7: விண்ணப்பக் கட்டணத்தைச் சமர்ப்பிக்கவும்.
படி 8: அனைத்து செயல்முறைகளும் முடிந்ததும் விண்ணப்பத்தின் பிரிண்ட் எடுக்கவும். இல்லையெனில், விண்ணப்பதாரர் இங்கே கிளிக் செய்வதன் மூலம் நேரடி விண்ணப்ப இணைப்பை பெறலாம்.

Tags : NEET ,of , Undergraduate, Medical course, NEET exam
× RELATED நீட் தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு