×

பூங்கா குளத்தில் மூழ்கி கேரள மாணவி பலி

அம்பத்தூர்:  கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் 7ம் வகுப்பு படிக்கும் தனது 13 வயது மகள் கீர்த்தனாவுடன் பள்ளி விடுமுறைக்காக பாடி புதுநகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், அந்த வீட்டிலிருந்த உறவுக்கார வாலிபர்கள், தந்தையுடன் சுற்றி பார்ப்பதற்காக கீர்த்தனா வெளியே சென்றுள்ளார். அப்போது, அம்பத்தூர் மாதனாங்குப்பம் மெயின் ரோட்டில் உள்ள தாங்கல் பூங்கா குளத்தை சுற்றி பார்த்துள்ளனர்.

இந்நிலையில் கீர்த்தனா கால் தவறி அந்த குளத்திற்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்த தீயணைப்புத்துறையினர் மாணவி கீர்த்தனாவின் உடலை இறந்த நிலையில் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Kerala , Kerala student dies after drowning in park pond
× RELATED சந்தன கட்டை கடத்திய கேரளாவை சேர்ந்த 6 பேர் கைது..!!