×

ஹரி இயக்கத்தில் விஷால்

சென்னை: ஹரி இயக்கும் படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கிறார். அருண் விஜய், பிரியா பவானி சங்கர் நடித்த ‘யானை’ படத்துக்குப் பிறகு, அடுத்தப் படத்துக்கான வேலைகளில் இயக்குநர் ஹரி இறங்கியுள்ளார். இந்த முறை அவர் மீண்டும் போலீஸ் கதையை இயக்குகிறார். அவர் இயக்கிய ‘சாமி’, ‘சிங்கம்’ படங்களின் போலீஸ் கேரக்டர்கள் பேசப்பட்டன.

அதில் இருந்து மாறுபட்டு வித்தியாசமான போலீஸ் கதையை அவர் இயக்க இருக்கிறாராம். இதில் விஷால் ஹீரோவாக நடிக்கிறார். கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கிறது. செப்டம்பர் அல்லது அக்டோபரில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. விஷால் நடிப்பில் ‘தாமிரபரணி’, ‘பூஜை’ படங்களை இயக்குநர் ஹரி ஏற்கனவே இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Vishal ,Hari , Vishal directed by Hari
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்