மம்தா குறித்து சர்ச்சை மே. வங்க காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கைது

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார். இதன் பின்னர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மீதான விமர்சனத்துக்காக திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மாநில முதல்வருமான மம்தா பானர்ஜியை கவுஸ்தக் பாக்சி கடுமையாக தாக்கி பேசியிருந்தார். அவர் மீது நேற்று முன்தினம் பர்டோலா காவல்நிலையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நேற்று அதிகாலை போலீசார் குழுபாராக்பூரில் உள்ள கவுஸ்தக் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினார்கள். பின்னர் பாக்சியை கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பாக்சி கைது செய்யப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் காவல்நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: