×

ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: நடுவரின் தவறான முடிவால் போட்டியிலிருந்து பாதியில் வெளியேறிய கேரள அணி

பெங்களூரு: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் முதல் நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் நேற்றிரவு பெங்களூரு, கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் 90 நிமிடம் முடிவில் இரு அணிகளும் கோல்கள் அடிக்கவில்லை. இதனால் இரு அணிகளுக்கும் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில் ஆட்டத்தில் 96 வது நிமிடத்தில் பெங்களூர் அணிக்கு பிரி கீக் வாய்ப்பு ஒன்று கிடைத்தது. அப்போது வீரர்கள் யாரும் சரியாக லைனில் நிற்க கூட இல்லை. கேரளாவின் கோல் கீப்பர் அவர் இடத்திற்கு கூட செல்லவில்லை. மேலும் நடுவர் கூட விசில் அடிக்கவில்லை. ஆனால் அதற்குள் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர் சுனில்ஷேத்ரி கோல் அடித்துவிட்டார். இதற்கு நடுவரும் அனுமதி அளித்துவிட்டார். இதனால் கடுப்பான கேரள அணி வீரர்கள் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

விதிகள் மீறி கோல் அடிக்கப்பட்டதாகவும், இது தவறு என்றும் இதனை அனுமதிக்க கூடாது என்றும் அவர்கள் முறை விட்டனர். எனினும் இதனை கண்டுகொள்ளாத நடுவர் போட்டியை தொடர கூறினார். இதைப் பார்த்து கடுப்பான கேரள கால்பந்து அணியின் பயிற்சியாளர் தங்களது அணி வீரர்களை போட்டியிலிருந்து விலகுமாறு கூறியதை அடுத்து கேரள வீரர்கள் மைதானத்தில் இருந்து வெளியேறினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோலை திரும்பி பெற்றுக் கொள்ள நடுவரும் முன்வராத நிலையில் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக கேரளா அணி அறிவித்தது. இதனையடுத்து பெங்களூரு அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையாகி உள்ளது. சுனில் ஷேத்ரி தவறான முறையில் கோல் அடித்ததாக ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் அவரை தாக்கி பதிவிட்டு வருகின்றனர்.

Tags : ISL ,Kerala , ISL football series: Kerala team exited in the middle of the match due to referee's wrong decision
× RELATED நாளை ஐஎஸ்எல் பைனல் மோகன்பகான்-மும்பை மோதல்