படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள் பந்தலூர்- பாட்டவயலுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

*பெற்றோர்கள் எதிர்பார்ப்பு

பந்தலூர் :  நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் கூடலூர் அரசு போக்குவரத்து கிளை அலுவலகம் மூலம் இயக்கப்படும் பஸ்கள் குறைவாக உள்ளதால் காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ்களில் சென்று வர சிரமப்படுகின்றனர்.நேற்று முன்தினம் பந்தலூரில் இருந்து பாட்டவயல் செல்லும் அரசு பஸ்சில் பயணிகள் ஏறி செல்ல இடமில்லாமல் பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கி செல்லும் நிலை ஏற்பட்டது.

இந்த வழித்தடத்தில் போதிய பஸ்கள் இல்லாததால் இது போன்ற ஆபத்தான பயணங்களில் செல்ல வேண்டி உள்ளது.இதனால், கூடலூரில் இருந்து பந்தலூர் பாட்டவயல் வழித்தடத்தில் மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசு போக்குவரத்து கழகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: