பெரம்பூர் நகைக்கடையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேர் பெங்களூருவில் கைது

சென்னை: பெரம்பூர் நகைக்கடையில் 9 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டனர். பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள நகைக்கடையில் கடந்த10-ம் தேதி 9 கிலோ நகைகள், ரூ.50 லட்சம் மதிப்பு வரை நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையர்களை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் பெங்களூருவில் 2 பேர் கைதாகினர். நகைக் கடையின் ஷட்டரை கேஸ் வெல்டிங் மூலம் அறுத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை பூர்வீகமாக கொண்டவர் ஸ்ரீதர். இவர் தனது பூர்வீக சொத்துக்களை விற்றுவிட்டு சென்னை பெரம்பூரில் உள்ள பேப்பர் மில் சாலையில் நகைக்கடை ஒன்றை ஆரம்பித்துள்ளார். இரண்டு மாடிகள் கொண்ட கட்டிடத்தில் முதல் தளத்தில் நகைக்கடையும், இரண்டாம் தளத்தில் ஸ்ரீதர் தனது குடும்பத்தினருடனும் வசித்து வருகிறார்.கடந்த பிப்ரவரி 9ம் தேதி இரவு நகைக்கடையில் வியாபாரம் செய்து விட்டு ஊழியர் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சாவியை ஸ்ரீதரிடம் கொடுத்துள்ளார்.

காலை 9 மணி அளவில் ஸ்ரீதர் கடையை திறப்பதற்கு முன்பு, கடையின் முன்பக்க ஷெட்டர் வெல்டிங் மிஷினால் வெட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். கடையின் உள்ளே சென்று பார்த்த போது, லாக்கர் கதவை கட் செய்து அதில் இருந்த 5 கோடி மதிப்புள்ள 9 கிலோ தங்க நகைகள் மற்றும் 50 லட்சம் ரூபாய் மதிப்பு வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. கொள்ளையர்களை தனிப்படை போலீசார் தேடிவந்த நிலையில் பெங்களூருவில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: