×

சோனியாகாந்தி மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி நேற்று முன்தினம் திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் உடனடியாக டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் அவர் இருந்து வருகின்றார். இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் சோனியாகாந்தியின் உடல்நிலை குறித்து தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Sonia Gandhi , Sonia Gandhi admitted to hospital
× RELATED என்ன விலை கொடுத்தாவது ஆட்சியைப்...