×

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவு..!

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 50,000க்கும் அதிகமானோரை காவு வாங்கியது. துருக்கி, சிரியாவில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச நாடுகள் துருக்கி, சிரியாவுக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளன. துருக்கி, சிரியாவைத் தொடர்ந்து உலகின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான், ஜப்பான் மற்றும் நமது நாட்டின் பல பகுதிகளில் தொடர் நிலநடுக்கம் உணரப்படுகிறது. இந்நிலையில் இன்று இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் மிகுந்த பதற்றத்துடன் வீடுகள் மற்றும் வணிக வளாகங்களை விட்டு வெளியேறி வீதிகள் மற்றும் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆகப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெசிசிர் செலாடன் மாவட்டத்தில் இருந்து தென் கிழக்கே 36 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தகவல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Indonesia , Strong earthquake in Indonesia: 5.6 on the Richter scale..!
× RELATED ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50...