துபாய் டென்னிஸ் தொடர்: ஜோகோவிச்-மெட்வெடேவ் அரையிறுதியில் இன்று மோதல்

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் சர்வதேச ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் கால் இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் ஜோகோவிச், 5ம் நிலை வீரரான போலந்தின் ஹூபர்ட் ஹர்காக்ஸ் மோதினர். இதில், ஜோகோவிச் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு கால் இறுதியில், 3ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மெட்வெடேவ், 6-3,6-2 என்ற செட் கணக்கில், குரோஷியாவின் போர்னா கோரிக்கை வீழ்த்தினார்.

ரஷ்யாவின் ஆண்ட்ரி ரூப்லெவ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோரும் அரையிறுதிக்குள் நுழைந்தனர். இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதியில், ரூப்லெவ்-அலெக்சாண்டர் ஸ்வெரேவ், இரவு 8.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு அரையிறுதியில் ஜோகோவிச்- மெட்வெடேவ் மோதுகின்றனர்.

Related Stories: