சென்னை: கால பருவநிலை மாற்றத்தை கவனத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு அமைத்த நிர்வாக குழு ஒரு முக்கியமான முயற்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த காலநிலை மாற்ற நிர்வாக குழுவின் முதல் கூட்டத்தில் பங்கேற்ற பல்துறை நிபுணர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு தான் கால பருவ நிலை தொடர்பாக நிர்வாக குழுவை முதன் முறையாக அமைத்துள்ளதாக மான்டேக் சிங் அலுவாலியா தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை கணிக்கும் செயல் திட்டங்கள், வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக இந்த குழு 2021 அக்டோபரில் தமிழ்நாடு அரசு குழு அமைத்தது. பொருளாதார நிருபனரும், மத்திய திட்ட குழுவில் பணியாற்றும் மான்டேக் சிங் அலுவாலியா, உலக சுகாதார மையப்பின் முன்னாள் விஞ்ஞானி சௌமியா சாமிநாதன், ஐ.நா. சுற்றுசூழல் அமைப்பில் பணியாற்றிய எரிக் எஸ்.சோல்ஹிம், ராம்கோ சமூக சேவைகளின் தலைவர் நிர்மலா ராஜா உள்ளிட்டோர் இந்த குழுவிவில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த குழுவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார்.

