×

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி ஓ.பி.எஸ். தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை!

சென்னை : ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி ஓ.பி.எஸ். தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளர் பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் உரிமையியல் வழக்கை தாக்கல் செய்துள்ளார். நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பாக இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியை இடைக்காலப் பொதுச் செயலாளராக நியமித்தது, ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர்களை நீக்கியது ஆகிய தீர்மானங்களை ரத்து செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.Tags : GP S.S. , AIADMK, General Committee, Resolutions, OPS.
× RELATED ஒன்றிய அரசின் சி.பி.எஸ்.இ. விளையாட்டு...