×

நடிகர் வடிவேலு உள்ளிட்ட 50 பேருக்கு போலி கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியவர் தலைமறைவு!!

சென்னை :சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வைத்து வழங்கப்பட்ட போலி கௌரவ டாக்டர் பட்டங்களை சினிமா பிரபலங்களுக்கு வழங்கிய ஹரிஷ் தலைமறைவாகிவிட்டார். பிப். 26ம் தேதி, நகைச்சுவை நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட 50 பேருக்கு போலி கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அனைத்தும் போலியானவை என தெரிய வந்ததை அடுத்து, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அளித்த புகாரின் அடிப்படையில் 7 பிரிவுகளின் கீழ் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Vativelu , Actor, Vadivelu, Fake, Honorary Doctor, Degree
× RELATED கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்...